Wednesday 29 November 2017

உயர் திரு இயக்குநர் அவர்களுக்கு கோரிக்கை..

அனுப்புநர்:
ஆர்.கார்கில் ராஜேந்திரன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,(டாடா)

பெறுநர்:
உயர்திரு இயக்குநர் அவர்கள்,
தொடக்கக் கல்வித் துறை,
இயக்குநர் அலுவலகம்,
DPI வளாகம்,
கல்லூரி சாலை,
சென்னை -600 006
ஐயா,
பொருள்:பள்ளிக் கல்வித் துறை- தமிழக பள்ளிக் கலைத் திருவிழா- உயர் தொடக்கநிலை   மாணவர்கள் (6,7,8) போட்டிகள்-   அதிக அளவிலான பள்ளிகள் பங்கேற்பு-தொடக்கக் கல்வி துறை- பள்ளிக் கல்வி துறை மாணவர்களுக்கு தனித் தனியே நடத்த கோருதல்- சார்பு
பார்வை: பள்ளிக்கல்வித் துறை - அரசாணை (நிலை) எண் :163 நாள் 10/07/2017.
வணக்கம்,தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளில் உள்ள திறனை வெளிக் கொணரும் வகையில் நடத்தப்படும் *தமிழக பள்ளிக் கலைத்திருவிழா* மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களின் ஆர்வம் காரணமாக அனைத்து போட்டிகளிலும் அதிக அளவில் மாணவர்கள் ,பள்ளிகள் பங்கேற்கின்றனர்.
 பார்வையில்  கண்ட அரசாணையின் இணைப்பில் உள்ள  படி பல்வேறு பிரிவுகளில் உயர் தொடக்க மாணவர்களுக்கான (வகுப்ப-6,7,8) பிரிவு-2 ல் நடுநிலை/உயர் நிலை/மேனிலை/ பள்ளிகளில் பயிலும் அனைத்து 6,7,8, வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. அப்போட்டிகளின் போது மாணவர்களின் ஆர்வத்தின் காரணமாக அனைத்து போட்டிகளிலும் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கலந்து கொண்டமையால் மாணவர்களின் திறன்களை நேரத்தைக் கருதி முழுமையாக வெளிப்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.எனவே தொடக்கக் கல்வித்துறையில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளை தனியே  கல்வி மாவட்ட அளவில் செய்யும் பட்சத்தில் கலைத் திருவிழாவை எவ்வித நடைமுறை சிக்கல்கள் இன்றி மேலும் சிறப்பாக நடத்த இயலும்.எனவே பிரிவு 2 ன் கீழ் உள்ள போட்டிகளை பள்ளிக் கல்வி துறை மாணவர்களுக்கு தனியாகவும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த ஆவண செய்ய வேண்டுமாய் கனிவுடன் கோருகிறோம்..
இப்படிக்கு.
R.கார்கில் ராஜேந்திரன், மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).

No comments:

Post a Comment