Friday 6 October 2017

VOICE OF TATA :
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?
EMIS - முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது



SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,

1. Go to School Profile

2. Class-Wise no of Sections .

3. Add class And Section Details

4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது
1.go to student
2. create new child list
பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.

தேவைப்படும் முக்கிய விவரங்கள்

1.மாணவரின் தொலைபேசி எண்

2.மாணவன் சேர்ந்த தேதி

3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற  முடியாது)

4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தர வேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)

5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாக காண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்

6. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை

7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இரு நபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்

8. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)

9. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண், செக்‌ஷன், மீடியம்(பயிற்று மொழி) முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்

Thursday 5 October 2017

Voice of TATA:

SCERT நமது TATA சங்கத்திற்கு கலைத்திட்டம் , பாடத்திட்டம் மாற்றம் ஆய்வுக்குழுவில் ஆஜராகி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அழைப்புக்கடிதம் அனுப்பியுள்ளது. நமது இயக்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களது மேலான கருத்துக்களை எழுத்து மூலமாக பொதுச்செயலாளரின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்கால பாடத்திட்டம் சிறப்பாக அமைய நமது பங்களிப்பினை வழங்குமாறு           கேட்டுக்கொள்கிறோம்.
                    மாநில அமைப்பு,
                             TATA.

Wednesday 4 October 2017

*‌🇹‌🇦‌🇹‌🇦 ‌🇳‌🇪‌🇼‌🇸*

இன்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விரும்பி  சேலம் மாவட்ட அமைப்பின் வழியாக எமது இயக்கத்தினை  வலுப்படுத்திடம் விதமாக செயல்பட ஆயுத்தமாகியுள்ள புதியதாக களம் இறங்கியுள்ள எடப்பாடி ஒன்றியத்தின் ‌TATA அமைப்பின் உதயத்தினை  மாவட்ட அமைப்பின் சார்பாக வரவேற்பதுடன் அதன் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவ்வமைப்பு தோன்றிட அயராது உழைத்த எமது அமைப்பின் மாவட்டதலைவர் திரு. மகேஷ்வரன் அவர்களை வாழ்த்தி வணங்குகின்றோம். அன்னாரது அறிய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

இவண்
மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (‌🇹‌🇦‌🇹‌🇦)
சேலம் மாவட்டஅமைப்பு

‌ டிப்ளமோ கல்வி தகுதிக்குரிய  ஊதிய விகிதமான  9300+4200 வழங்கி அதிலிருந்து அடுத்த ஊதியகுழுவிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை....
*ஒரே கல்வி தகுதி,ஒரே விதமான பணி ஆனால் ஊதிய விகிதம் மூன்று விதமாக வழங்கப்பட்டு வருகிறது*
1. 2009 முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை
ஊதியம்
5200-20200+2800.

2.1.1.2006 முதல் 2009 முன் இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ளோர்களின் அடிப்படை ஊதியம்
4500+(BP) +2250 (DP)+1620 DA(24%)=8370 (இதோடு 1.86 ஆல் பெருக்கி கொடுக்கப்பட்டுள்ளது).

3. 2004 முன் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து தேர்வு நிலை,சிறப்பு நிலை  முடித்தோர்க்கு
9300-34800+4300 என்ற ஊதிய விகிதத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது..
கடந்த PAY COMMISSION    இது போன்ற ஊதிய முரண்பாடுகளால் இடைநிலை ஆசிரியர் பல்வேறு போராட்டம் செய்தும் குழப்பமான ஊதிய விகிதம் சரி செய்யப்படவில்லை.

*வரும் PAY COMMISSION லாவது சரி செய்யப்படுமா ? என்று எதிர்ப்பார்க்கபடுகிறது*

 முரன்பாடான ஊதிய விகிதம் சரிசெய்யப்பட வேண்டும்*
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் இந்த மாறுபட்ட நிலைகளை களைந்து கல்வித்தகுதிக்கு உரிய ஊதியமான 9300+4200 வழங்க வேண்டும்...
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா) தங்களை இனிதே வரவேற்கிறது....