Tuesday 28 May 2019

https://tamil.thehindu.com/tamilnadu/article27280113.ece

பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Saturday 16 February 2019




ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம் என்பதற்கான பதிவாளர்-சென்னை அவர்களின் சுற்றறிக்கை...

want PDF comment ur whats app number..

Friday 8 February 2019

*இறுதி வரை களம் கண்ட தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் (TATA) போராளிகளுக்கு மாநில அமைப்பின் வணக்கங்கள்...*

நம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண் இன்னல் களைய  தனி சங்க நடவடிக்கைகளாக தொடர்ச்சியான நம் குரலை
களப் போராட்டங்கள் சட்டப் போராட்டங்கள் என பல களங்களை கண்டு இன்று கூட்டுப் போராட்டத்தின் மீதான நம் நம்பிக்கையில்..

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமை மீட்புப் போரில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஜேக்டோ-ஜியோ வுடனான நம் TATA வின் நீண்ட, நெடிய,உறுதியான பயணம் நமக்கு பல நேர்மறை அனுபவங்களைத் தந்துள்ளது..

குறிப்பிடும்படியாக வேகமும் விவேகமும் சேர்ந்தாற் போலமாற்று சங்கங்களைச் சார்ந்த நம் மூத்த சங்கவாதிகளின் வழிகாட்டுதலும் அவர்களுடனான நட்பும் நமக்கு எதிர்காலத்தில் நம் திசைவழிப் போக்கினை முன்னெடுக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை...

*வரலாற்றை மறந்தவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது* என்கிற வகையில் நாம் இன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகளுக்குப் பின்னால் உள்ள உரிமை மீட்பு வரலாற்றைப் படித்ததனால் இன்று வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம் என்பதை எண்ணி நாம் இறும்பூதெய்துகிறோம்...

இதோ ஜேக்டோ-ஜியோ *போர்க்களத்தில் சிறை மீண்டு பணி இடைநீக்கத்தினை மகிழ்வோடும் பெருமையோடும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பூர்த்தி செய்திருக்கிற தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) தியாகப் போராளிகளான*

1)திரு.S.அருண்குமார்,
மாவட்ட செயலாளர்,
நீலகிரி மாவட்டம்.

2)திரு.R.மணிகண்டன்,
மாவட்டபொருளாளர்,
நீலகிரி மாவட்டம்.

3)திரு I.சிலம்பரசன்,
வட்டார செயலாளர்,கூடலூர் நீலகிரி மாவட்டம்.

4)திரு.N.K.ராஜேந்திரன்,
வட்டார துணை செயலாளர், கூடலூர்.நீலகிரி மாவட்டம்,

5)திரு.M.சுந்தர்ராஜ்,
மாவட்ட பொருளாளர்,
திருவண்ணாமலை மாவட்டம்.

6)திரு.R.துரைராஜ்,
வட்டார தலைவர்,
தா.பேட்டை..
திருச்சி மாவட்டம்,

ஆகிய 6 போராளிகளுக்கும்

17 ஆ & பணி இடமாறுதல் பெற்று பெருமை அடைந்திருக்கிற TATA போராளிகள் 121 பேருக்கும் வரலாற்றில் அரசு ஊழியர் ஆசிரியர் இனத்திற்கான நம் TATA வின் பங்கினை பதிவு செய்திருக்கிற இந்த தியாக சுடர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA) மாநில அமைப்பின் சார்பில் ஆழ்மனதிலிருந்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் வீர வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.

ஜேக்டோ-ஜியோ வின் 9 கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் வென்றெடுப்போம்..

குறிப்பாக

*இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வு விரைவில் நிச்சயம் விடியும்..*
*அது நம்மால் மட்டுமே முடியும்..*

அதுவரை நம் மனதில் போராட்டத் தழலினை நீரு பூத்த நெருப்பாய் வார்த்தெடுப்போம்...

*இவண்:ஆ.சபரிராஜ்,* *மாநில துணை தலைவர்.*
*தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் TATA*

Monday 4 February 2019

*JACTTO-GEO Flash:*

 வணக்கம். ஜாக்டோ-ஜியோ வின் சார்பாக இன்று மாண்புமிகு அமைச்சர்கள் திரு. ஜெயக்குமார்,திரு. செங்கோட்டையன் , பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் துறை செயலாளர் ஆகியோரிடம் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்/பணியாளர்கள்/ஆசிரியர்கள் மீதான குற்றவியல் /தற்காலிக பணிநீக்கம்/பணிமாறுதல் ஆகிய நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக் கொண்டு அனைவரும் பணியில் சேர உத்திரவிடுமாறு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வரிடம் கொண்டு சென்று நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்கள். நாளை மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரை சந்திக்க முயற்சித்து வருகிறோம். 2. பாதிக்கப்பட்ட அனைவரையும் எல்லா வகையிலும் மாவட்ட ஜாக்டோ-ஜியோ பாதுகாப்பது. 3.பாதிக்கப்பட்ட  அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்கும் வரை  ஒருங்கிணைப்பாளர்கள்  தொடர்ந்து சென்னையிலிருந்து  அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்..

*இவண். ஜாக்டோ-ஜியோ*
CPS ஆசிரியர்களுக்கு...
தமிழக CPS ஆசிரிய சகோதரிகள் சகோதரர்களுக்கு வணக்கம்,,வருமான வரி படிவத்தில் சேமிப்பு 1.50 லட்சம் மிகும் cps ஆசிரியர்கள் 80ccd1 b- ன் கீழ் 50 ஆயிரம் கூடுதலாக கழித்துக் கொள்ளலாம்..ஆக மொத்தம் 2 லட்சம் வரை சேமிப்பின் கீழ் கழிக்கலாம்..இதற்காக Cps தொகையினை பிரித்தும் (split)  காண்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்....

*இவண்:
TATA மாநில அமைப்பு*

Friday 1 February 2019

TNSCHOOLS ATTENDANCE APPS 2.1.8 க்கு VERSION-ல் தற்போது ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் வசதி இடம் பெற்றுள்ளது..

Friday 11 January 2019


*ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்..
ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்*
🎯 அரசு முடிவு எடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி வழக்கை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்க அரசு தரப்பு கோரிக்கை
🎯இதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதம்.
🎯 வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது..
*வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுகிறோம்- ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவிப்பு*
*வரும் 22 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு*
*அரசு தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கூறுவதால் வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தகவல்*
*🎯அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது நீதிமன்றம்.*

திட்டமிட்டபடி ஜனவரி-22 போராட்டம் தொடஙகும்.
ஜேக்டோ-ஜியோ அறிவிப்பு...

Monday 7 January 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணை வரும் 11/01/2019 (வெள்ளிக் கிழமை) தேதிக்கு ஒத்திவைப்பு..

ஜாக்டோ-ஜியோ வழக்கு  11.01.2019ற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு.