Sunday 10 December 2017

*பிரார்த்திப்போம்*
ஒகி புயலால் கரை சேர இயலாமல் இருக்கும் மீனவர்கள் விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவதோடு.. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்(டாடா) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது...

Wednesday 6 December 2017

பி.லிட் பி.எட் தடை ஆணை


*🗳பி.லிட் படித்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் சென்று பின்னர்   B Ed உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்ற தொடக்கக்கல்வித்துறையின் உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடையாணை கொடுத்துள்ளது...!*

*📤இது தஞ்சாவூர்- ஊரகத்தை சார்ந்த பாதிக்கப்பட்ட தலைமை ஆசியர்களின் சார்பில் பெறப்பட்டுள்ளது...!*


Wednesday 29 November 2017

உயர் திரு இயக்குநர் அவர்களுக்கு கோரிக்கை..

அனுப்புநர்:
ஆர்.கார்கில் ராஜேந்திரன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்,(டாடா)

பெறுநர்:
உயர்திரு இயக்குநர் அவர்கள்,
தொடக்கக் கல்வித் துறை,
இயக்குநர் அலுவலகம்,
DPI வளாகம்,
கல்லூரி சாலை,
சென்னை -600 006
ஐயா,
பொருள்:பள்ளிக் கல்வித் துறை- தமிழக பள்ளிக் கலைத் திருவிழா- உயர் தொடக்கநிலை   மாணவர்கள் (6,7,8) போட்டிகள்-   அதிக அளவிலான பள்ளிகள் பங்கேற்பு-தொடக்கக் கல்வி துறை- பள்ளிக் கல்வி துறை மாணவர்களுக்கு தனித் தனியே நடத்த கோருதல்- சார்பு
பார்வை: பள்ளிக்கல்வித் துறை - அரசாணை (நிலை) எண் :163 நாள் 10/07/2017.
வணக்கம்,தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளில் உள்ள திறனை வெளிக் கொணரும் வகையில் நடத்தப்படும் *தமிழக பள்ளிக் கலைத்திருவிழா* மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களின் ஆர்வம் காரணமாக அனைத்து போட்டிகளிலும் அதிக அளவில் மாணவர்கள் ,பள்ளிகள் பங்கேற்கின்றனர்.
 பார்வையில்  கண்ட அரசாணையின் இணைப்பில் உள்ள  படி பல்வேறு பிரிவுகளில் உயர் தொடக்க மாணவர்களுக்கான (வகுப்ப-6,7,8) பிரிவு-2 ல் நடுநிலை/உயர் நிலை/மேனிலை/ பள்ளிகளில் பயிலும் அனைத்து 6,7,8, வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. அப்போட்டிகளின் போது மாணவர்களின் ஆர்வத்தின் காரணமாக அனைத்து போட்டிகளிலும் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கலந்து கொண்டமையால் மாணவர்களின் திறன்களை நேரத்தைக் கருதி முழுமையாக வெளிப்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.எனவே தொடக்கக் கல்வித்துறையில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளை தனியே  கல்வி மாவட்ட அளவில் செய்யும் பட்சத்தில் கலைத் திருவிழாவை எவ்வித நடைமுறை சிக்கல்கள் இன்றி மேலும் சிறப்பாக நடத்த இயலும்.எனவே பிரிவு 2 ன் கீழ் உள்ள போட்டிகளை பள்ளிக் கல்வி துறை மாணவர்களுக்கு தனியாகவும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த ஆவண செய்ய வேண்டுமாய் கனிவுடன் கோருகிறோம்..
இப்படிக்கு.
R.கார்கில் ராஜேந்திரன், மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).

Friday 24 November 2017

*JACTO-GEO flash news* : வணக்கம் . ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 4.12.17 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உயர்மட்டக்குழு தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள். தகவல் பகிர்வு: டாடா மாநில அமைப்பு

Thursday 23 November 2017

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

*JACTTO_GEO* *அன்பார்ந்த தோழர்களே*

*நமது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி*
*JACTTO - GEO* *அமைப்பின் சார்பாக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம்*

*அதனடிப்படையில் அரசின் சார்பாக அமைச்சர்களோடு பேச்சு வார்த்தை நடைபெற்றது.*
*நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு தயாராக இல்லை*.
*குழுக்களின் அறிக்கைகள் வரும் வரை காத்திருக்க கோரினர்*

*எனவே நாம செப்டம்பர் 7 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தயாரானோம்*.

*திடீரென்று அதற்கு முதல் நாள் 6 ம் தேதி முதலமைச்சர் பேச்சு .*

*ஆனால் அங்கு பேச்சு வார்த்தை எதுவும் நடத்த அரசு தயாராக இல்லை.*
*நமக்கு அவமரியாதையே கிடைத்தது.*


*தொடர்ந்து இரண்டு நாள் செப்டம்பர் 7,8 போராட்டத்தை எழுச்சியோடு நடத்தினோம்.*

*8 - ம் தேதி மதுரை*
*உயர்நீதி மன்றம் நமது போராட்டத்திற்கு தடை விதித்தது.*
*நீதிமன்ற தடையை மீறி நாம் செப்டம்பர் 11முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்.*

*ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஜல்லிக்கட்டு போராட்டத்தை மிஞ்சியது.*

*போராட்ட காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டோம்.*
*காவல்துறையினரால் நமது பந்தல்கள் அகற்றப்பட்டன.*
*அனுமதி மறுக்கப்பட்டது.*

*நாம் அதற்கெல்லாம் அஞ்சாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரோடு பேச்சு வார்த்தை நடத்தி பிறகு காவல்துறையின் பாதுகாப்போடு போராட்டத்தை எழுச்சியோடு தொடர்ந்தோம்.*

*நீதிமன்றத்தின் சமரசத்தை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தோம்.*

*அக்டோபர் 30 ல் ஊதியக்குழு அறிக்கையை பெற்று அதை நடைமுறை படுத்துவது தொடர்பாக அரசு அறிக்கை தரவேண்டும் இல்லையென்றால் நீதிமன்றமே இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.*

*ஊதியக்குழுவை தாமதப்படுத்தலாம் என்று எண்ணிய அரசு நீதிமன்ற உத்தரவால் அக்டோபர் 30 க்கு முன்பாகவே ஊதியக்குழு அறிக்கையை பெற்று அக்டோபர் மாதம் முதலே நடைமுறைப் படுத்தியுள்ளது.*

*இந்த ஊதியக்குழு என்பதே நமது போராட்டத்தால் மட்டுமே விளைந்தது.*
*கெஞ்சி பெற்றதல்ல.*

*பழைய ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட்டே புதிய ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்பதிலே நாம் உறுதியாக இருந்தோம்.*

*ஆனால் நமக்கு கிடைத்தது ஏமாற்றமே..*

*எனவே தான் நாம் அனைத்து மாவட்ட தலைநகங்களிலும் கடந்த மாதம்*

 *ஊதியக்குழு மாற்றமா? ஏமாற்றமா?*

*என்ற தலைப்பில் விளக்கக் கூட்டங்கள் நடத்தினோம்.*

*இருந்தும் இதுவரை முரண்பாடுகள் களையப்படவில்லை.*
*21 மாத நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.*

*எனவே தான் தோழர்களே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தாலும கோரிக்கைகளுக்காக நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென திட்டமிட்டுள்ளோம்.*

*தொடர்ந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.*

*நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் நாம் எழுச்சியோடு போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.*

*எனவே தோழர்களே நீங்கள் ஒவ்வொருவரும்  உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை முழுமையாக போராட்டத்தில் பங்குபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்*

*தோழமையுடன்*🤝*ஜாக்டோ-ஜியோ*

களம் காண்போம் வா தோழா...

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (டாடா) நிர்வாகிகள்  அனைவருக்கும்  வணக்கங்கள்,...
            24.11.2017 இன்று  வெள்ளி மாலை 5.00 மணிக்கு மாநிலம் முழுவதும் உள்ள     தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெறும் ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு  இழந்த இடைநிலை ஆசிரியர் ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஆசிரியர்/அரசு ஊழியர்களின் மேலும் சில முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க களம் காண வேண்டெமென  கேட்டுக் கொள்கிறோம் .
                               இவண் ...
               டாடா மாநில அமைப்பு

Wednesday 22 November 2017

மகிழ்ச்சியான செய்தி

Flash news:
Message from JACTO-GEO:
வணக்கம், நமது வழக்கு நாளை மதியம் மதுரை உயர்நீதிமன்றத்தில்  2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. ஒருங்கிணைப்பாளர்ககள்,jacto-geo. *தகவல் பகிர்வு:. மாநில அமைப்பு ,டாடா*

Saturday 18 November 2017

பள்ளி பதிவேடுகள் என்னென்ன?

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்
1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

Wednesday 15 November 2017

வருவாய் ஈட்டும் நபர் ...

*விபத்தில் இறந்த வருவாய் ஈட்டும் பெற்றோரின் குழந்தைகளுக்கான உதவித்தொகை பெற தேவையான சான்றிதழ்களின் பட்டியல்*
1) மாணவர் விண்ணப்பம்
2)பெற்றோர் விண்ணப்பம்
3) இறப்புச்சான்று
4)power finance படிவம்(₹.75000 27/11/2014 க்குபின்)
5) வாரிசு சான்று
6)₹.72000 க்கு கீழான வருமானச் சான்று
7)FIR COPY
8) POSTMORTEM report
9) குடும்ப அட்டை நகல்
10) மாணவணுடன் பெற்றோர்/பாதுகாவலர் இணைந்த joint A/c passbook நகல்
11) application form..

JACTO-GEO- அதிரடி முடிவு..

*Message from
 JACTO-GEO
 Flash news* ஜேக்டோ- ஜீயோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 15.11.2017 மாலை 5 மணியளவில் நடை பெற்றது .
இக்கூட்டத்திற்கு ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், மாயவன், வெங்கடேசன்,  சுப்ரமணியன், அன்பரசு, கே.பி.ஓ. சுரேஷ். சாந்தகுமார் மற்றும் ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொணடனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஜேக்டோ ஜியோ போரட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
2. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.
3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட  குழு  அறிக்கையை 30.11.2017க்குள் தவறாமல் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும்.
4. இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள்,பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
5. 8வது ஊதியக்குழுவில்  வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் லட்சக்கனக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
 இவண்
 R.கார்கில் ராஜேந்திரன்
மாநில தலைவர்.
செ.கிப்சன்
மாநில பொது செயலாளர் டாடா

Tuesday 14 November 2017

1.86 ? 9300+4200 ?

1.86 பின்னனி....
இ.நி.ஆ.பணி நியமன ஆணையில் 4500-125-7000 என்றிருந்து  5  ஆவது ஊதிய குழுவில்  4500-125-7000 ஊதிய கட்டில் பணியாற்றி 6 ஆவது ஊதிய குழு அமுல்படுத்திய போது வாங்கி வந்த ஊதியத்தை விட 6 ஆவது ஊதிய குழு  ஊதியம் குறைந்தது. ஊதிய குழுவின் அடிப்படை, பெற்று வந்த ஊதியத்தை விட ஒரு ரூபாயாவது புதிய ஊதிய குழு உயர்த்தி தர வேண்டும் ஆனால் 6 வது ஊதிய குழு அமுல்படுத்திய போது ஊதியம்  குறைந்தது அதன்  காரணத்தினால் வழங்கப்பட்ட பெருக்கு காரணி தான் 1.86...

    31/05/2009 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே 1.86 பொருந்தும். ஏனெனில் 1.6.2009 முதல் 7 ஆவது ஊதியகுழு அமுல்படுத்தப்படுவதால் முந்தைய ஊதிய குழுவின் பெருக்கு காரணி 1.86 1.06.2009 க்குப் பின் பணி   ஏற்றவர்களுக்கு பொருந்தாது.

  எனவே இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டுமாயின் டிப்ளமோ கல்வி தகுதிக்குரிய ஊதியமான 9300+4200 மட்டுமே நிரந்தர தீர்வு...
*அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!*

1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.

2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
             துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
       அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
     தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR  N Dept 03.04.2013
  ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
      அரசுஊழியரிடம்  பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
    அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது

Saturday 11 November 2017

இ.நி.ஆ ஊதிய முரண்..

SG Asst Pay Scale News:
       ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ  கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்.
 1) Training Instruc

5200-20200+2800 - 9300-34800+4200

2) Hostal Superintendent and Physical Training Officer

5200-20200+2800 - 9300-34800+4200

3) Laboratory Assistant

5200-20200+2800 - 9300-34800+4200

4) Laboratory Technician Grade-1

5200-20200+2800 - 9300-34800+4200

5) Laboratory Technician Grade-II

5200-20200+2800 - 9300-34800+4200

6) Dental Hygienist/Dental Mechanic
5200-20200+2800 - 9300-34800+4200

7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist
5200-20200+2800 - 9300-34800+4200

8)Leprosy physiotherapist Physio therapy Technician
5200-20200+2400 - 9300-34800+4200

9) Pharmacists
5200-20200+2800 - 9300-34800+4200

10) Health Inspector Grade-I
5200-20200+2800 - 9300-34800+4200

11) Food Inspector
5200-20200+2800 - 9300-34800+4200

12) Technician Grade-I
5200-20200+2800 -9300-34800+4200

13) Audio-Visual Technician
5200-20200+2400 - 9300-34800+4200

14) Librarian
5200-20200+2400 - 9300-34800+4200

15) Orthotic Technician
5200-20200+2800 - 9300-34800+4200

16) Pharmacist(Rural Develop)
5200-20200+2800 - 9300-34800+4200

17) Junior Foreman
5200-20200+2800 - 9300-34800+4200

18) Grading Assistant
5200-20200+2800 - 9300-34800+4200

19) Colour Processing Asst.
5200-20200+2800 - 9300-34800+4200

20) Boom Assistant 5200-20200+2800 - 9300-34800+4200

21) Junior Draughting Officer
5200-20200+2800 - 9300-34800+4200

22) Technician Assistant
5200-20200+2800 - 9300-34800+4200

23) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

24) Draughtsman Grade 5200-20200+2800 - 9300-34800+4200

25) Pharmacist 5200-20200+2800 - 9300-34800+4200

26) Sanitary Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

27) Over Seer 5200-20200+1900 - 9300-34800+4200

28) Pharmacist(Corporation) 5200-20200+2800 - 9300-34800+4200

29) Sanitory Inspector 5200-20200+2800 - 9300-34800+4200

ஆசிரியர் இல்லம்

 ஆசிரியர்கள் தங்கும் வசதி கொண்ட   சென்னை மற்றும் திருச்சி ஆசிரியர் இல்லம் தொடர்பு எண்கள்..
சென்னை- 044-24351116
திருச்சி- 94871 57922

Wednesday 8 November 2017

NMMS-ONLINE DELAY..

NMMS-ONLINE: 8 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் NMMS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தலில் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து  அரசு தேர்வுகள் துறை இயக்ககத்திற்கு தொடர்பு கொண்டு டாடா சார்பில்  இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது.. கோளாறு சரி செய்யப்பட்டு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்படும் என்று தேர்வுகள் துறை இயக்குநரக தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.. 

Tuesday 7 November 2017

    VOICE OF TATA : JACTO-GEO MESSAGE : தோழர்களே. ஜாக்டோ- ஜியோ வழக்கு மதுரையில்தான் நடத்த ப்படவேண்டும் சென்னை உயர்நீமன்ற   நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாகவும் ,அதனால் மதுரையில் வழக்கை விரைந்து கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நமது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இன்று அல்லது நாளை நமது தரப்பில் மதுரை நீதமன்றத்தில் mention செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முடிவு செய்ய இயலாது. எனவே சற்று பொறுத்திருப்பது நமக்கு பலனளிக்க வாய்ப்புள்ளது. எனவே சற்று பொறுத்து நிலமைக்கேற்ப விரைவில் உயர்மட்டக்குழு கூடி நல்ல முடிவுகளை திட்டமிடுவோம். அதுவரை ஒற்றுமை எனும் பதாகையை உயர்த்திப் பிடிப்போம். சுப்பிரமணியன். ஒருங்கிணைப்பாளர்.

Sunday 5 November 2017

 தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பாக    4 வது   நாளாக காத்திருப்பு போராட்டத்தில் உள்ள ஆசிரியர் திரு செல்வகுமார் அவர்கள்....

http://www.onetamilnews.com/News/protest-teacher-selvakumar-at-pudukottai-on-the-4th-day
7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!!!

✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.*

ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*

✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

தகவல்....டாடா மாநில அமைப்பு....

Friday 6 October 2017

VOICE OF TATA :
EMIS - முதல் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்வது எவ்வாறு?
EMIS - முதல் வகுப்பு  மாணவர்கள் விவரங்கள் புதியதாக உள்ளிடு செய்ய
முதலில் 1ஆம் வகுப்பிற்கு செக்‌ஷன் உருவாக்க வேண்டும்

செக்‌ஷன் எவ்வாறு  உருவாக்குவது



SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்,

1. Go to School Profile

2. Class-Wise no of Sections .

3. Add class And Section Details

4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.

பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்.
புதிய மாணவர் சேர்க்கை எவ்வாறு செய்வது
1.go to student
2. create new child list
பிறகு படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளீடு இடவும்.

தேவைப்படும் முக்கிய விவரங்கள்

1.மாணவரின் தொலைபேசி எண்

2.மாணவன் சேர்ந்த தேதி

3.மாணவரின் முழு முகவரி (முதல் முறையே சரியாக பதிவு செய்ய வேண்டும் பின்னர் மாற்ற  முடியாது)

4.இயலாக்குழந்தைகள் எனில் அதன் விவரம்(முதல் முறை  பதியும் போதே தர வேண்டும் இல்லையேல் பின்னர் சேர்க்க இயலாது)

5.மாணவனின் தமிழ் பெயர் பதிவு செய்தாலும் பின்னர் சரியாக காண்பிக்கவில்லை-எனவே அதனை பதிவு செய்வதை தவிக்கலாம்

6. மாணவனின் புகைப்படம் தற்போது தேவையில்லை

7.மாணவனின் தந்தை,தாய்,அல்லதுபாதுகாவலர் ஆகியோரில் குறைந்தது இரு நபர்களின் விவரங்கள் தரப்பட வேண்டும்

8. மாணவனின் செல்போன் எண்(தாய் அல்லது தந்தை அலைபேசி எண்)

9. மாணவன் பயிலும்வகுப்பு,சேர்க்கை எண், செக்‌ஷன், மீடியம்(பயிற்று மொழி) முன்னர் படித்தவகுப்பு ஆகியன தரப்படல் வேண்டும்

Thursday 5 October 2017

Voice of TATA:

SCERT நமது TATA சங்கத்திற்கு கலைத்திட்டம் , பாடத்திட்டம் மாற்றம் ஆய்வுக்குழுவில் ஆஜராகி பாடத்திட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அழைப்புக்கடிதம் அனுப்பியுள்ளது. நமது இயக்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களது மேலான கருத்துக்களை எழுத்து மூலமாக பொதுச்செயலாளரின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்கால பாடத்திட்டம் சிறப்பாக அமைய நமது பங்களிப்பினை வழங்குமாறு           கேட்டுக்கொள்கிறோம்.
                    மாநில அமைப்பு,
                             TATA.

Wednesday 4 October 2017

*‌🇹‌🇦‌🇹‌🇦 ‌🇳‌🇪‌🇼‌🇸*

இன்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விரும்பி  சேலம் மாவட்ட அமைப்பின் வழியாக எமது இயக்கத்தினை  வலுப்படுத்திடம் விதமாக செயல்பட ஆயுத்தமாகியுள்ள புதியதாக களம் இறங்கியுள்ள எடப்பாடி ஒன்றியத்தின் ‌TATA அமைப்பின் உதயத்தினை  மாவட்ட அமைப்பின் சார்பாக வரவேற்பதுடன் அதன் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவ்வமைப்பு தோன்றிட அயராது உழைத்த எமது அமைப்பின் மாவட்டதலைவர் திரு. மகேஷ்வரன் அவர்களை வாழ்த்தி வணங்குகின்றோம். அன்னாரது அறிய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

இவண்
மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (‌🇹‌🇦‌🇹‌🇦)
சேலம் மாவட்டஅமைப்பு

‌ டிப்ளமோ கல்வி தகுதிக்குரிய  ஊதிய விகிதமான  9300+4200 வழங்கி அதிலிருந்து அடுத்த ஊதியகுழுவிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை....
*ஒரே கல்வி தகுதி,ஒரே விதமான பணி ஆனால் ஊதிய விகிதம் மூன்று விதமாக வழங்கப்பட்டு வருகிறது*
1. 2009 முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை
ஊதியம்
5200-20200+2800.

2.1.1.2006 முதல் 2009 முன் இடைநிலை ஆசிரியர் பணியில் உள்ளோர்களின் அடிப்படை ஊதியம்
4500+(BP) +2250 (DP)+1620 DA(24%)=8370 (இதோடு 1.86 ஆல் பெருக்கி கொடுக்கப்பட்டுள்ளது).

3. 2004 முன் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து தேர்வு நிலை,சிறப்பு நிலை  முடித்தோர்க்கு
9300-34800+4300 என்ற ஊதிய விகிதத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது..
கடந்த PAY COMMISSION    இது போன்ற ஊதிய முரண்பாடுகளால் இடைநிலை ஆசிரியர் பல்வேறு போராட்டம் செய்தும் குழப்பமான ஊதிய விகிதம் சரி செய்யப்படவில்லை.

*வரும் PAY COMMISSION லாவது சரி செய்யப்படுமா ? என்று எதிர்ப்பார்க்கபடுகிறது*

 முரன்பாடான ஊதிய விகிதம் சரிசெய்யப்பட வேண்டும்*
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் இந்த மாறுபட்ட நிலைகளை களைந்து கல்வித்தகுதிக்கு உரிய ஊதியமான 9300+4200 வழங்க வேண்டும்...
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா) தங்களை இனிதே வரவேற்கிறது....